ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
ஏ.ஆர்.மூவி பாரடைஸ் சார்பில் ஏ.ஆர்.சீனுராஜ் தயாரித்துள்ள படம் களத்தூர் கிராமம். சரண் கே.அத்வைதன் இயக்கி உள்ளார். கிஷோர், யக்னா ஷெட்டி, சுலீல் குமார், மிதுன், அஜய் ரத்னம், உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தை கடந்த மாதம் 15ந் தேதி வெளியிடுவதாக அறிவித்து விளம்பரமும் செய்திருந்தார்கள். ஆனால் படம் வெளிவரவில்லை. அன்று வெளியிட்டிருந்தால் பெரும் இழப்பை சந்தித்திருப்போம் என்கிறார் தயாரிப்பாளர் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
களத்தூர் கிராமம் படத்தை செப்-15ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக இருந்த நிலையில் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு போதுமான எண்ணிகையில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அந்த சூழ்நிலையில் நாங்கள் படத்தை வெளியிட்டிருந்தால் மிகுந்த பொருளாதார பின்னடைவை சந்தித்திருப்போம். படமும் மக்களின் பார்வைக்கு சரியாக சென்று சேர்ந்திருக்காது.
ஒரு நல்ல படத்தை தயாரித்துள்ளோம் என்கிற திருப்தி எங்களுக்கு இருக்கிறது. எங்களது இரண்டு வருட கடின உழைப்பு இந்தப் படம். அதனால் படத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக கொஞ்சம் காத்திருந்தாலும் பரவாயில்லை என முடிவு செய்து, தற்போது வருகிற 6-ம் தேதி ரிலீஸ் செய்கிறோம். நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு போதுமான தியேட்டர்கள் கிடைத்திருக்கிறது என்கிறார் தயாரிப்பாளர் சீனுராஜ்.