ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற படம் தான் 'அங்கமாலி டைரீஸ்'. இந்தப்படத்தில் நாயகனுக்கு இணையாக ஆனால் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சரத்குமார் என்கிற புதுமுகம். ஹீரோவை விட இவர் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். அதையெல்லாம் விட மோகன்லால் - லால் ஜோஸ் கூட்டணியில் வெளியான 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல்' பாடல் அதிரிபுதிரி ஹிட்டாக இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிகின்றன.
கடந்த வெள்ளியன்று வெளியான 'போக்கிரி சைமன்' என்கிற படத்தில் தீவிரமான விஜய் ரசிகராக நடித்துள்ளார். இந்தநிலையில் லிங்குசாமியின் டைரக்சனில் விஷால் நடிக்கும் 'சண்டக்கோழி-2' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சரத்குமார். விஜய் ரசிகராக நடித்து, தற்போது விஷால் படத்திலும் முக்கிய இடம்பிடித்துள்ள சரத்குமாருக்கு, விக்ரம் நடிக்கும் படத்தில் அவருடன் இணைந்து சிறிய வேடத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது ஆசையாம்