இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஷால் நடித்த திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கையாளாக முக்கிய வேடத்தில் நடித்தவர் விநாயகன். ஆனால் அவ்வளவு வரவேற்பு கிடைத்தாலும், தமிழில் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல், மலையாள சினிமாவில் மட்டும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான கம்மட்டிப்பாடம் படம், வில்லன் நடிகராக வலம் வந்த விநாயகனின் குணச்சித்திர நடிப்பை வெளிக்கொண்டு வந்ததுடன், சில விருதுகளையும் பெற்று தந்தது.
அதனால் மீண்டும் லைம் லைட்டுக்குள் வந்துள்ள விநாயகன் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளார் என்றுகூட சொல்லலாம். அந்தவகையில் தற்போது பி.உன்னிகிருஷ்ணன் டைரக்சனில் மோகன்லால் நடித்து வரும் வில்லன் படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடிப்பதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.
இந்நிலையில் கவுதம் மேனன் டைரக்சனில் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் விநாயகனுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விக்ரம் வெளியிட்டதன் மூலம் இந்த விஷயம் இப்போது தெரியவந்துள்ளது.