ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கதில் பிரபு தேவா நடித்த தேவி படம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். மீண்டும் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். சாம்.சி.எஸ் இசை அமைக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபுதேவா ஜோடியாக நடிக்கிறார்.
இந்தியில் லவ் இன் டோக்யோ, ஜூகுனு உள்பட பல படங்களை தயாரித்த பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் ட்ரைன் ஆர்ட்ஸ் ரவிசந்திரனுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை விஜய் அலுவலத்தில் எளிமையாக நடந்தது. இது குறுகிய காலத்தில் தயாராகும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாகும். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.