'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நாகசைதன்யா - சமந்தாவின் திருமணம் அக்டோபர் 6 - 7 தேதிகளில் கோவாவில் நடைபெறுகிறது. அந்த திருமணத்தில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் சுமார் 150 மட்டுமே கலந்து கொள்கிறார்கள். 6-ம் தேதி இந்து முறைப்படியும், 7-ம் தேதி கிறிஸ்தவ முறைப்படியும் அவர்களது திருமணம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், திருமணத்திற்கு கிர்ஷா பஜாஜ் என்ற டிசைனர் ஆடைகள் தயார் செய்து வருகிறாராம். அவர் சமந்தாவுக்காக உருவாக்கி வரும் உடையின் அவுட்லுக் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதிலும் சமந்தா தன் திருமணத்துக்கான லெஹங்கா உடையை அணிந்து போட்டோ ஷூட் செய்திருக்கிறார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
திருமண நிச்சயதார்த்ததின் போது நாக சைத்தன்யாவுக்கும், தனக்கும் உருவான காதலை மையப்படுத்தி படங்களுடன் சேலை ஒன்றை உருவாக்கி இருந்தார் சமந்தா. இப்போது திருமணத்திற்கு தனது ஆடையை டிசைனருடன் அமர்ந்து பார்த்து பார்த்து தயார் செய்து வருகிறார்.