தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாக நடித்தவர் பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ். அதையடுத்து தற்போது மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்கியுள்ள படைவீரன் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா, கல்லூரி அகில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, அம்ரிதா நாயகியாக நடித்திருக்கிறார்.
மேலும், கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் அனைதுக்கட்ட பணிகளும் முடிவடைந்த நிலையில், சமீபத்தில் நடிகர் தனுஷூக்கு இந்த படத்தை போட்டு காட்டியுள்ளார்கள். அப்போது இந்த படத்திற்காக நான் ஒரு பாடல் பாடுகிறேன் என்று சொன்னாராம் தனுஷ். அதையடுத்து மதுரை சூழலில் ஒரு பாடலை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரெக்கார்டிங் செய்திருக்கிறார்கள்.
கார்த்திக் ராஜா இசையில் இந்த பாடலை பாடலாசிரியர் பிரியன் எழுதியிருக்கிறார். இவர் இதற்கு முன்பு தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்திற்கும் பாடல்கள் எழுதியிருக்கிறார். மேலும், இன்னொரு நடிகரின் படம் என்றபோதும், அந்த கதையில் அதிக இம்ப்ரஸ் ஆன தனுஷ், ரொம்ப ஆர்வத்துடன் அந்த பாடலை பாடிக்கொடுத்ததோடு, படைவீரன் படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கையை தெரிவித்துள்ளாராம். இதனால் படைவீரன் யூனிட் உற்சாகத்தில் இருக்கிறது.