ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சிவகார்த்திகேயனின் '24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிப்பில் மோகன்ராஜா இயக்கும் வேலைக்காரன் படம் விநாயக சதுர்த்திக்கு ரிலீஸாக இருந்தது. அந்த தேதியில் விவேகம் ரிலீஸ் ஆனதால், வேலைக்காரன் ரிலீஸை ஆயுதபூஜை விடுமுறையையொட்டி இம்மாதம் 29-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
ஆயுதபூஜைக்கும் அரை டஜன் படங்கள் வெளிவரவிருப்பதால் தீபாவளிக்கு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. தீபாவளிக்கு மெர்சல் வெளியாகவிருப்பதால் வேலைக்காரன் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கூட கிடைக்காது என்பதால் ரிலீஸை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள்.
பலகட்டமாக படத்தொகுப்பு முடிவடைந்த நிலையிலும் வேலைக்காரன் படத்தின் பைனல் புட்டேஜ் மூன்றரை மணி நேரமாக இருக்கிறதாம். இந்த மூன்றரை மணி நேரப்படத்தை இரண்டேகால் மணி நேரமாக படத்தின் நீளத்தைக் குறைக்கும்படி மோகன்ராஜாவிடம் சொல்லி இருக்கின்றனர். இயக்குநர் மோகன்ராஜாவோ 2 மணி நேரம் 40 நிமிடமாக ட்ரிம் பண்ணலாம் என்று நினைக்கிறாராம். இதனால் எடிட்டிங்கில் ஒரு சிறிய குழப்பம் நீடிப்பதாக கூறப்படுகிறது. இது எல்லாம் தீர்ந்த பின்னரே வேலைக்காரன் ரிலீஸில் தெளிவான முடிவு ஏற்படும் என்கிறார்கள். அதேசமயம், டிசம்பர் மாதம் வேலைக்காரன் ரிலீஸ் உறுதி என்பதில் தயாரிப்பு தரப்பு உறுதியாக இருக்கிறது.