அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல்பிரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்துள்ள படம் ஸ்பைடர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மகேஷ்பாபு நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப்படம் என்பதால், இந்த படத்தின் ஆடியோ விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் சென்னையிலுள்ள மகேஷ்பாபுவின் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அவரை உற்சாகப் படுத்தினர்.
மேலும், இந்த படம் செப்டம்பர் 27-ந்தேதி தசரா பண்டிகையின்போது உலகமெங்கிலும் வெளியாக உள்ளது. இந்த நிலையில், அனைத்துகட்ட பணிகளும் முடிக்கப்பட்டு ஸ்பைடர் தெலுங்கு பதிப்பு தணிக்கை குழுவினருக்கு திரையிடப்பட்டது. படத்திற்கு எந்தவித கட்டும் கொடுக்காமல் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். தமிழ்ப் பதிப்பிற்கான சென்சார் பணி நடந்து வருகிறது.