சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது |
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா, வினய் மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான படம் 'துப்பறிவாளன்'. தொடர்ந்து தனித் தனியே சில தோல்விப் படங்களைக் கொடுத்த மிஷ்கின், விஷால் இருவருக்கும் 'துப்பறிவாளன்' படம் முக்கியமான படமாக கருதப்பட்டது. அவர்களது எதிர்பார்ப்பு பொய்யாகாமல் படத்திற்கு முதல் நாளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏ சென்டர்களில் பிரமாதமான வரவேற்பையும், பி மற்றும் சி சென்டர்களில் சுமாரான வரவேற்பையும் இப்படம் பெற்றுள்ளது என்கிறார்கள். படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்குப் படம் பிடித்திருக்கிறது என்றே தியேட்டர் வட்டாரங்களிலும் தெரிவிக்கிறார்கள். மிஷ்கின் படம் என்றால் ஆர்வத்துடன் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் இளைஞர்கள் இருப்பதால் இந்த வார இறுதிக்குள் படம் நல்ல வசூலைக் கொடுக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். நேற்று வியாழக்கிழமையே படத்தை வெளியிட்டது படத்திற்கு மைனஸ்தான், இருந்தாலும் வசூல் திருப்திகரமாகவே இருந்ததாம்.
மிஷ்கின், விஷால் இருவரின் முந்தைய தோல்விகளை இந்தப் படம் நிச்சயம் சரிக்கட்டும் என்றே திரையுலகத்தில் பேச்சு இருக்கிறது. இது போன்ற வித்தியாசமான படங்களில் நடித்தால்தான் விஷால் அவருடைய மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற பேச்சு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.