இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அஜித் நடித்து வெளிவந்த விவேகம் படத்தின் டீசர் புதிய உலக சாதனையை படைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் நாம், 17000 லைக்குகள் பெற்றால் விவேகம் படத்தின் டீசர் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற உலக சாதனையைப் பிடிக்கும் என செய்தி வெளியிட்டிருந்தோம். அதை பல செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்களும், மற்ற இணையதளங்களும் செய்தியாக வெளியிட்டனர்.
நாம் குறிப்பிட்டபடி அஜித் ரசிகர்கள் 3 நாட்களுக்குள் அந்த 17000 லைக்குகளை விவேகம் டீசருக்கு அளித்து புதிய உலக சாதனையை அந்த டீசர் படைக்க வைத்துள்ளனர். தற்போது ஸ்டார் வார்ஸ் - தி லாஸ்ட் ஜெடி டீசரும், விவேகம் டீசரும் 5,72,000 லைக்குகள் பெற்றுள்ளன. யு டியூப் இணையதளம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் லட்சத்தில் மட்டுமே லைக்குகள் எண்ணிக்கை காட்டப்படுகிறது. ஆயிரத்திலும், நூறிலும் அந்த எண்ணிக்கை தெரிவதில்லை.
விவேகம் டீசர் விரைவில் 5,73,000 லைக்குகளைக் கடந்துவிடும். அப்போது உலகத் திரைப்பட வரலாற்றில், ஒரு படத்தின் டீசரில், அதிக லைக்குகளைப் பெற்றுள்ளது ஒரு தமிழ்ப் படம், அந்தப் படம் அஜித் நடித்துள்ள விவேகம் திரைப்படம் என்ற பெருமை கிடைக்கும்.
விவேகம் டீசருக்கு இதுவரை 2 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. ஆனால், ஸ்டார் வார்ஸ் - தி லாஸ்ட் ஜெடி டீசருக்கே 4 கோடிக்கும் கொஞ்சம் குறைவான பார்வைகள் கிடைத்துள்ளன. அந்த விதத்தில் பார்த்தால் ஸ்டார் வார்ஸ் டீசரை விட பாதி அளவே கிடைத்துள்ள பார்வைகள் எண்ணிக்கையில் விவேகம் டீசர் அதிக லைக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம் உலகளவில் டீசரில் அதிக லைக்குகள் பெற்று சாதனை படைத்த முதல் இந்திய நடிகர் என்ற பெருமையும் நடிகர் அஜித்திற்கு கிடைத்திருக்கிறது.