‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபு சாலமன் இயக்கிய கும்கி பெரிய வெற்றி பெற்றது. அதில் அறிமுகமாகன விக்ரம் பிரபு, லட்சுமிமேனன் நட்சத்திரங்களாக வளர்ந்தார்கள். அதன் பிறகு பிரபுசாலமன் இயக்கிய கயல், தொடரி படங்கள் சரியாக போகவில்லை. இதனால் அவர் மீண்டும் தனது சக்சஸ் பார்முலாவுக்குள் வந்து விட்டார். தற்போது கும்கியின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
இதில் ரா ரா ராஜசேகர் படத்தில் நடித்த மதி ஹீரோவாக நடிக்கிறார். இவர் இயக்குனர் லிங்குசாமியின் சகோதரி மகன். அவருக்கு ஜோடியாக பிரபல நட்சத்திர தம்பதிகளான டாக்டர் ராஜசேகர், ஜீவிதா ஆகியோரின் மகள் ஷிவானி நடிக்கிறார். கும்கி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த வாரம் முதல் தாய்லாந்தின் அடர்ந்த காடுகளில் படமாகி வருகிறது. இதுவும் யானையை மையமாக கொண்ட படம் என்பதால் முதலில் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கிவிட வேண்டும் என்று தீர்மானித்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார். கும்கி படத்தின் கிளைமாக்சில் கிராபிக்ஸ் யானையை பயன்படுத்தியது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதால் இந்த முறை நிஜமான யானைகைள வைத்தே அனைத்து காட்சியையும் படமாக்க இருக்கிறார். இதனால் யானை தொடர்புடைய காட்சிகள் அனைத்தையும் தாய்லாந்தில் எடுத்து முடித்துவிட்டுதான் தாய்நாடு திரும்புகிறார் பிரபு சாலமன்.