ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீப காலமாக தென்னிந்திய சினிமாக்களில் ஒரு டிரெண்ட் சத்தமில்லாமல் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் இந்தி நடிகர்களை வில்லன்களாக்குவதும் மலையாள சினிமாவில் தமிழ், தெலுங்கு நடிகர்களை நடிக்க வைப்பதும், தெலுங்கு சினிமாவில் மலயாள நடிகர்களை அழைத்து முக்கிய வேடங்களில் நடிக்க வைப்பதும் நடக்கிறது.
கடந்த வருடம் தெலுங்கில் உருவான ஜூனியர் என்.டி.ஆரின் 'ஜனதா கேரேஜ்' படத்தில் மோகன்லால், ரகுமான், உன்னி முகுந்தன் என மலையாள நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அதை தொடர்ந்து அனுஷ்காவின் நடிப்பில் உருவாகியுள்ள 'பாஹ்மதி' படத்தில் மலையாள நடிகர்கள் ஜெயராம், உன்னி முகுந்தன் இருவரும் நடித்துள்ளனர்..
அந்தவகையில் மலையாளத்தில் இருந்து அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கால் பதிக்கிறார் சண்டக்கோழி புகழ் வில்லன் நடிகரான லால். ஆம். பிராபாஸ் நடித்து வரும் சாஹோ' படத்தில் முக்கியமான விதத்தில் நடிக்க நடிகர் லாலை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏற்கனவே 2006ல் அன்னவரம் மற்றும் 2008ல் காதர்நாக் ஆகிய தெலுங்கு படங்களில் லால் நடித்துள்ளார் என்றாலும் கிட்டத்தட்ட பத்து வருடம் கழித்து அவர் மீண்டும் தெலுங்கில் என்ட்ரி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.