ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சுசிகணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, அமலாபால், பிரசன்னா நடித் துள்ள படம் திருட்டுப்பயலே-2. இந்த படத்தின் முதல் பாகத்தில் பிளாக் மெயில் சம்பந்தப்பட்ட ஒரு கதையை படமாக்கியிருந்த சுசிகணேசன், இந்த இரண்டாவது பாகத்தில் இணையதளத்தினால் பெண்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சம்பந்தமான ஒரு கதையை படமாக்கியிருக்கிறாராம்.
மேலும், இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அமலாபால், பல கவர்ச்சிகரமான காட்சிகளில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதுபற்றி அமலாபால் கூறுகையில், திருட்டுப் பயலே-2 படம் நல்லதொரு சமூக அக்கறையுள்ள கதையில் உருவாகியிருக்கிறது. இதில் என் இமேஜை கெடுக்கும் வகையிலான காட்சிகள் எதுவும் இல்லை.
குறிப்பாக இன்றைய பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த கதையில் ஒரு குடும்பப்பெண்ணாகவே நடித்துள்ளேன். அதேபோல் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன். அதனால் இந்த இரண்டு படங்களும் தமிழ் சினிமாவில் என்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்லும் படங்களாகவே அமையும் என்கிறார் அமலாபால்.