இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இனிகோ பிரபாகரன், ஸ்ரீபிரியங்கா நடிக்கும் படம் பிச்சுவா கத்தி. இவர்களுடன் செங்குட்டுவன், அனிஷா, யோகி பாபு, பால சரவணன், நான் கடவுள் ராஜேந்திரன், ரமேஷ் திலக், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார், ஐயப்பன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
இது கிராமிய பின்னணியில் உருவாகும் காமெடி படம். கிராமத்து காதல் சென்ட்டிமென்ட். காமெடி கலாட்டாக்கள் நிறைந்த படம். அதனால் தான் நிறைய காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள். களவாணி படத்திற்கு பிறகு யதார்த்தமான தஞ்சை மண் மணக்கும் படம். கும்பகோணத்திலும், அதை சுற்றியுள்ள பகுதியிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நல்ல அங்கீகாரத்திற்காக ஏங்கி வரும் இனிகோ பிரபாகரனுக்கு இது நல்ல திருப்பம் தரும். என்கிறார் இயக்குனர் ஐயப்பன்.