ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
3 வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி நடித்த படம் மெல்லிசை. அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்தார். இவர்களுடன் ரமேஷ் திலக், அர்ஜுன், சோனாயா தீப்தி நடித்தனர். சி.எஸ்.சாம் இசை அமைத்திருந்தார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி உள்ளார்.
இது ஒரு க்ரைம் திரில்லர் படம். விஜய் சேதுபதியும், காயத்ரியும் நெருக்கமாக நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் ஆகியுள்ளது. தயாரிப்பாளருக்கு இருந்த கடும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. விஜய் சேதுபதி தனி அக்கறை எடுத்து படத்தை வெளியிட முயற்சித்தார்.
படத்தின் பெயரை புரியாத புதிர் என்று மாற்றினார்கள். இந்தப் படத்தை நம்பி இருந்த காயத்ரி அடுத்த படத்தில் நடிக்காமல் இருந்தார். விஜய் சேதுபதி தான் நடிக்கும் படம் ஒன்றில் காயத்ரி நடிக்க வாய்ப்பு பெற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் படம் வருகிற செப்டம்பர் 1ந் தேதி வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய டீசர் மற்றும் டிரைலர்களும் வெளியிடப்பட்டுள்ளது.