வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் விவேகம். படம் முழுக்க முழுக்க பல்கேரியா மற்றும் அதை சுற்றியுள்ள சில நாடுகளில் நடைபெற்றிருக்கிறது. அதோடு, இந்த படத்தில் வெளிநாட்டு சதியை முறியடித்து இந்தியாவை காப்பாற்றும் உளவுத்துறை அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறார்.
பயங்கரவாதிகளால் இந்தியாவிற்கு ஆபத்து வரப்போகிறது. இதனை தொடர்ந்து சில பயங்கரவாத தாக்குதல்களும் அரங்கேறுகிறது. ரா தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் ஒரு ரகசிய குழு அமைக்கப்படுகிறது. அதன் தலைவர் தான் அஜித். இந்த மிஷனில் அஜித் எப்படி வெற்றி பெறுகிறார் என்பது தான் விவேகம் படத்தின் கதை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தில் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் அதிகம் உள்ளதாம். அதோடு, அஜித் உள்பட அனைத்து நடிகர் நடிகைகளுமே ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற காஸ்டியூம்களில் தான் நடித்திருக்கிறார்களாம். அதனால் ஆங்கில படம் பார்த்த பீலிலை விவேகம் கொடுக்கும் என்கிறார்கள். விவேகம் படம் வருகிற ஆக., 24-ம் தேதி ரிலீஸாகிறது.