தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வரும் 24ஆம் தேதி அஜித் நடித்துள்ள 'விவேகம்' படம் பிரமாண்டமாக ரிலீசாக இருக்கிறது. கேரளாவில் விஜய் அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட அஜித்துக்கும் அந்த அளவை நெருங்கும் விதமாக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால் இந்தமுறை விவேகம் படத்தின் மூலம் விஜய்யை விட கேரளாவில் அஜித் தான் மாஸ் என்பதை நிரூபிக்கும் விதமாக தியேட்டர் ஒப்பந்தங்கள் நடைபெற்று வருகின்றன. கேரளாவில் 'விவேகம்' படத்தை வெளியிடுபவர் மோகன்லாலின் பிரமாண்ட படமான புலி முருகனை தயாரித்த தோமிச்சன் முலகுபாடம் என்பதும் ஒரு காரணம்.
அதனால் 'பாகுபலி-2'வுக்கு அடுத்தபடியாக, கபாலிக்கு இணையாக 'விவேகம்' படத்தை சுமார் 3௦௦க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறார்கள். கேரள அஜித் ரசிகர்களும் 'விவேகம்' பட ரசிகர்மன்ற சிறப்பு காட்சிகளின் எண்ணிக்கையில் மாஸ் காட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள். இதற்கு முன் கேரளாவில் வெளியான விஜய் படங்கள் 200லிருந்து 220 என்கிற தியேட்டர்கள் அளவிலேயே ரிலீசாகி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.