பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'விவேகம்' பட டீஸர் வெளியானபோது நடைபெற்ற சாதனைகள் இப்போது டிரைலர் வெளியானபோதும் தொடர்கிறது. விவேகம் டீஸர் வெளியான முதல் நாளில் மட்டும் 62 லட்சம் பேர் அதை பார்த்து ரசித்திருந்தனர். அதுமட்டுமல்ல, 3 லட்சம் லைக்குகளையும் பெற்று சாதனை புரிந்தது.
அதோடு, உலகளவில் திரைப்படங்களுக்கான யு டியூப் டீஸர் 'லைக்'குகளில் அஜித்தின் 'விவேகம்' பட டீஸர்தான் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது விவேகம் படத்தின் டீஸருக்கு இதுவரை ஐந்தரை லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ் கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், நேற்று இரவு 12.01 மணியளவில் வெளியான 'விவேகம்' டிரைலரும் இப்போது புதிய சாதனை படைத்துள்ளது. யு டியூபில் 'விவேகம்' டிரைலர் வெளியிடப்பட்ட முதல் 15 மணி நேரத்திலேயே இந்த டிரைலரை 36 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். 3 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. ஒட்டுமொத்தமாக 'லைக்ஸை' பொறுத்துவரை இது ஒரு புதிய சாதனை. விவேகம் பட டிரைலர் இன்னும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.