'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், விஜய் 3 வேடங்களில் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 20 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
மெர்சல் படத்தை தீபாவளி வெளியீடாக திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டதும், பல படங்கள் தீபாவளி ரிலீஸ் பந்தயத்திலிருந்து சைலண்ட்டாக விலகிகிட்டன.
கடந்த வாரம்வரை வேறெந்த படமும் தீபாவளி பந்தயத்தில் மெர்சலுடன் போட்டியிடாத நிலையில், தற்போது இரண்டு படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்திருக்கும் 'ஹர ஹர மஹாதேவகி' படமும், அர்ஜுன் இயக்கத்தில் அவரின் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் 'சொல்லிவிடவா' படமும் தீபாவளியன்று ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு இந்த அறிவிப்பு செய்யப்பட்டாலும் தீபாவளி நெருங்க நெருங்க பந்தயத்தில் குதிக்கும் படங்களில் மாற்றம் இருக்கும் என்பதே உண்மை.