ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராம் இயக்கத்தில், புதுமுகம் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் கடந்தவாரம் ரிலீஸாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தரமணி. இப்படத்தை திரையுலகத்தை சேர்ந்த பலரும் பாராட்டி வரும் வேளையில் நடிகர் ரஜினியும், தரமணி படத்தை பார்த்து பாராட்டியிருக்கிறார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஜே.சதீஷ் கூறுகையில், "ரஜினியிடமிருந்து அழைப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியான ஆச்ரியத்தில் உறைந்தே போனேன். தரமணி ஒரு துணிச்சலான படம் என்று கூறினார். படத்தின் எல்லா அம்சங்களை பற்றியும் விவரமாக பாராட்டினார். படத்தின் வணிக வெற்றியை பற்றி ஆர்வமுடன் கேட்டறிந்தார். இது போன்ற ஜாம்பவான்களின் பாராட்டுகள் மேலும் தரமான படங்களை தயாரிக்க எனக்கும், எனது நிறுவனத்துக்கும் பெரும் ஊக்கமாக உள்ளது என்று கூறியுள்ளார்.