ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்துள்ள 'விவேகம்' படம் அடுத்த வாரம் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்து அதே தேதியில் வெளியிட உள்ளார்கள். தெலுங்கு டீசர் கூட சுமார் ஒரு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. ஆனால், பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இதுவரை யு டியுபில் சுமார் 10 லட்சம் பார்வைகள் மட்டுமே கிடைத்துள்ளது. சூர்யா, கார்த்தி, தனுஷ், ஏன் விஜய் ஆண்டனி ஆகியோருக்குக் கிடைத்த வரவேற்பு கூட இன்னும் அஜித், விஜய் நடித்த தெலுங்கு டப்பிங் படங்களுக்குக் கிடைக்கவில்லை.
அதற்கு உதாரணமாக 'விவேகம்' தெலுங்கு டீசருக்கு யு டியுபில் கிடைத்த வரவேற்பையும், தனுஷ் நடித்து தெலுங்கில் வெளியாக உள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் தெலுங்கு டீசருக்குக் கிடைத்த வரவேற்பையும் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். 'விஐபி 2' தெலுங்கு டீசர் யு டியூபில் இதுவரை 89 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் தெலுங்கு டப்பிங் அங்கு 'ரகுவரன் பி.இ.,' என்ற பெயரில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது. அதனால், அதன் இரண்டாம் பாகமான 'விஐபி 2' படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தமிழில் கடந்த வாரம் 'விஐபி 2' வெளியான போதே தெலுங்கில் வெளியாக வேண்டியது. ஆனால், அன்று மூன்று நேரடித் தெலுங்குப் படங்கள் வெளியானதால் 'விஐபி 2' வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள். இப்போது படத்தை அடுத்த வாரம் 25ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். அப்போது படம் வெளிவந்தால் அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்திற்கும் 'விஐபி 2' படத்திற்கும் நேரடி மோதல் உருவாகும். தெலுங்கு ரசிகர்கள் அஜித்தை விட தனுஷுக்கு அதிக வரவேற்பு கொடுப்பதால் 'விஐபி 2' நல்ல வெற்றியைப் பெறும் என டோலிவுட்டில் சொல்கிறார்கள்.