‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் தினேஷ் பாபு. இவர், கிருஷ்ணன் என்ற ஒரு இளைஞன் வாழ்க்கையில் போராடி ஜெயித்ததை படமாக்க வேண்டும் என்று நினைத்தார். இதற்காக அவரிடம் அவர் கதையை கேட்டு திரைக்கதை அமைத்தார். ஆனால் கதைக்கேற்ற ஹீரோ கிடைக்காததால் கிருஷ்ணனையே ஹீரோவாக்கி விட்டார். படத்தின் தலைப்பு கிருஷ்ணம். இதுகுறித்து தினேஷ் பாபு கூறியதாவது:
கிருஷ்ணன் கேரக்டரில் நடிக்க பல நடிகர்களை ஆடிசன் செய்தேன். யாருமே செட்டாகவில்லை. அதனால் அவரையே நடிக்க வைக்க முடிவு செய்தேன். என் கதையில் நானே எப்படி நடிப்பது என்று அவர் தயங்கினார். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவருக்கு தைரியம் சொல்லி நடிக்க வைத்தேன். அவரது வாழ்க்கையில் அப்படி என்ன விசேஷம் என்பது படம் வெளிவரும் வரை சஸ்பென்சாக இருக்கும் என்றார்.
படத்தை பி.என்.பி.சினிமா தயாரிக்கிறது. கிருஷ்ணனுடன், அஸ்வரியா, மமிதா பஜ்ஜு, நடிக்கிறார்கள். ஹரி நாராயணன் இசை அமைக்கிறார், தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாராகிறது.