பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'தனி ஒருவன்' தமிழ்த் திரையுலகில் 2015ம் ஆண்டின் தனித்துவமான திரைப்படம். ஒரு புத்திசாலித்தனமான ஆக்ஷ்ன் திரைப்படம். பொதுவாக உடல் ரீதியாக அதிரடியில் நாயகன் இறங்கும் ஆக்ஷ்ன் திரைப்படங்களைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால், மூளையையும் பயன்படுத்தி நாயகன் அதிரடியில் இறங்கிய 'தனி ஒருவன்' படத்தின் வெற்றியும் தனித்துத் தெரிந்தது. அந்தப் படத்தை இயக்கிய மோகன் ராஜா, இப்போது இயக்கி முடித்திருக்கும் படம் 'வேலைக்காரன்'. இப்படத்தின் டீசரை நேற்று மாலை வெளியிட்டார்கள்.
நகைச்சுவை கலந்த நாயகனாக மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக ஆக்ஷ்ன் ஹீரோவாக இந்தப் படத்தில் களம் இறங்கியிருக்கிறார். அவருடைய இமேஜை மேலும் உயர்த்திக் காட்டக் கூடிய டீசராக இருக்கிறது 'வேலைக்காரன்' டீசர்.
படத்தின் முதல் பார்வையிலேயே ஒரு பக்கம் குடிசை மற்றொரு பக்கம் பிரம்மாண்ட கட்டிடங்கள் என நாயகனின் பின்னால் வைத்ததிலேயே ஒரு சமூகப் பிரச்சனையை மோகன் ராஜா கையிலெடுத்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. டீசரில் இடம் பெற்றுள்ள வசனமான “சூழ்நிலைக்கேத்த மாதிரி நாம மாறனதுலாம் போதும், இப்ப நமக்கேத்த மாதிரி, இந்த சூழ்நிலைய மாத்துவோம்,” மற்றும் “ஆபீசர் கேக்க மாட்டான், அத்தாரிட்டியும் கேக்காது, ஆனா, வொர்க்கர் நான் கேப்பேன், ஐ மீன், வேலைக்காரன் கேப்பான்” என சிவகார்த்திகேயன் பேசுவது மோகன் ராஜா மீண்டும் 'தனி ஒருவன்' போன்ற புத்திசாலித்தனமான ஆக்ஷ்ன் படத்துடன் வர உள்ளார் என்பது தெரிகிறது.
சாதாரணமானவன், சாமானியன் முதலாளி வர்க்கத்தை எதிர்த்தும், அதிகார வர்க்கத்தை எதிர்த்து வேட்டைக்குப் புறப்படுவது படம் பார்க்கும் சாதாரண ரசிகனுக்கும் மிகவும் பிடிக்கும். படத்தின் முந்தைய போஸ்டர்களில் பெயராக இடம் பெறாத பகத் பாசில் டீசரில் இடம் பிடித்திருக்கிறார். ஆனாலும், டீசரிலும் அவர் பெயர் இல்லை, அது ஏனோ ?. சிவகார்த்திகேயன் - நயன்தாரா ஜோடி படம் வந்த பின் பலருக்கும் பொறாமையை ஏற்படுத்தும். டீசரில் உள்ள காட்சிகளும், அனிருத்தின் பின்னணி இசையும் விறுவிறுப்பைக் கூட்டியுள்ளன.
நேற்று மாலை யுடியூபில் வெளியான டீசர் 18 மணி நேரத்திற்குள் 17 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. சிவகார்த்திகேயனின் முகப் புத்தகத்தில் 19 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. மொத்தமாக 36 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளதன் மூலம் 'வேலைக்காரன்' டீசருக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.