டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் ஜெயராமின் மகன் காளிதாஸ் அறிமுகமான ஒரு பக்க கதை படத்தில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். விஜய்சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இந்த படத்தை இயக்கினார். ஆனால் பல ஆண்டுகளாகியும் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
அதையடுத்து காளிதாஸ் நாயகனாக நடித்த மீன்குழம்பும் மண்பானையும் படம் எப்போதோ வெளியாகி விட்டது. என்றாலும், அதன்பிறகு மேகா ஆகாஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா படம் இன்னமும் ரிலீசாகவில்லை.
இந்நிலையில் தமிழ் படங்கள் கொடுத்த ஏமாற்றம் காரணமாக தெலுங்கிற்கு சென்ற மேகா ஆகாஷ், நிதினுக்கு ஜோடியாக லை என்ற படத்தில் நடித்தார். கடந்த ஆகஸ்ட் 11-ந்தேதி வெளியான அந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதோடு, மேகா ஆகாஷின் நடிப்பும் பேசப்பட்டு வருகிறதாம். அவருக்கு தெலுங்கில் முதல் படத்திலேயே நல்லதொரு ஓப்பனிங் கிடைத்திருப்பதால், தான் நடிக்கும் அடுத்த படத்திற்கும் நாயகியாக மேகா ஆகாஷையே புக் பண்ணி விட்டாராம் நிதின்.
இதுதவிர வேறு சில பட நிறுவனங்களும் புதிய படங்களுக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதால், தமிழ் நடிகையான மேகா ஆகாஷ், முழுநேர தெலுங்கு நடிகையாக முடிவெடுத்து ஐதராபாத்தில் குடியேற வீடு பார்த்து வருகிறாராம்.