நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
தமிழில் முதன் முதலாக நடிக்க ஆரம்பித்தாலும், தெலுங்கில் முதலில் அறிமுகமான நடிகை என்ற பெயரைப் பெற்றுள்ளார் நடிகை மேகா ஆகாஷ். விஜய் சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இரண்டாவதாக இயக்க ஆரம்பித்த 'ஒரு பக்கக் கதை' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ்.
2014ம் ஆண்டு செப்டம்பார் மாதம் ஆரம்பமான அந்தப் படம் முடிவடைந்தும் சில பிரச்சனைகளால் இன்னும் வெளிவராமலே உள்ளது. அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திலும் நடித்துவிட்டார் மேகா. இந்தப் படத்தின் வெளியீடும் தள்ளிக் கொண்டே போகிறது.
நல்ல வேளை, இந்த இரண்டு தமிழ்ப் படங்களையும் நம்பாமல் தெலுங்கில் நிதின் ஜோடியாக 'லை' படத்தில் நடித்தார் மேகா. அந்தப் படம் கடந்த வெள்ளியன்று வெளியாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேகா ஆகாஷுக்காகவாவது 'ஒரு பக்கக் கதை, எனை நோக்கி பாயும் தோட்டா' இரண்டு படங்களையும் தயாரிப்பாளர்கள் சீக்கிரம் வெளியிடுவார்களா...?.