ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்பைடர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் 25வது படம் இன்று(ஆக., 14) பூஜையுடன் ஆரம்பமானது. இப்படத்தை நாகார்ஜுனா, கார்த்தி நடித்த 'தோழா' படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. தன்னுடைய படங்களின் பூஜையில் மகேஷ்பாபு சென்டிமென்ட்டாக கலந்து கொள்ள மாட்டார். அவர் சார்பாக அவருடைய மனைவியும் முன்னாள் நடிகையுமான நம்ரதா கலந்து கொண்டார்.
இந்தப் படத்தை மகேஷ் பாபுவை முதன் முதலாக தெலுங்கில் நாயகனாக 'ராஜ குமாரடு' படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய அஸ்வினி தத், மகேஷ் பாபு நாயகனாக நடித்த 'சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி சேட்டு' படத்தைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
மகேஷ் பாபுவின் 23வது படமான 'ஸ்பைடர்', 24வது படமான 'பரத் அனி நேனு' ஆகிய படங்கள் வெளிவருவதற்கு முன்பே 25-வது படம் ஆரம்பமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.