ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடித்துள்ள 'ஸ்பைடர்' படத்தின் தெலுங்கு, தமிழ் டீசர் நேற்று காலை யு டியூப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் வெளியிடப்பட்டது.
மகேஷ் பாபு, தமிழ் ரசிகர்களுக்கு இன்னும் அதிகமாக அறிமுகமாகவில்லை, இருந்தாலும் இந்த 24 மணி நேரத்தில் தமிழ் டீசருக்கு யு டியுபில் 17 லட்சம் பார்வைகளும், பேஸ்புக்கில் 5 லட்சம் பார்வைகளும் கிடைத்துள்ளன.
தெலுங்கில் மகேஷ் பாபு முன்னணி கதாநாயகன் என்பதால் அங்கு 'ஸ்பைடர்' தெலுங்கு டீசர் அதிகப்படியான வரவேற்பைப் பெற்றுள்ளது. மகேஷ் பாபுவின் முந்தையப் பட சாதனைகளை முறியடித்துள்ளது. 24 மணி நேரத்தில் 'ஸ்பைடர்' தெலுங்கு டீசருக்கு யு டியுபில் 41 லட்சம் பார்வைகளும், பேஸ்புக்கில் 23 லட்சம் பார்வைகளும் கிடைத்துள்ளன.
யு டியுப், பேஸ்புக் இரண்டையும் சேர்த்து தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் 86 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. தெலுங்குப் படங்களின் யு டியூப் சாதனைகள் என்பது 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகுதான் அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியாகும் முன்னணி ஹீரோக்களின் டீசர் மற்றும் டிரைலர்களைப் பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அந்த விதத்தில் மகேஷ் பாவுக்கு டிஜிட்டல் உலகில் இது புதிய சாதனை தான்.
இருந்தாலும், தமிழில், ரஜினி, விஜய், அஜித் படங்களின் டீசர், டிரைலர் சாதனையை மகேஷ் பாபுவால் 'ஸ்பைடர்' பட டீசர் மூலம் தொட முடியவில்லை.