ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியத் திரையுலகில் வசூலில் பெரும் சாதனை படைத்த படம் 'பாகுபலி 2'. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா மற்றும் பலர் நடித்த இந்தப் படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் முதல் பாகத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் மா டிவி வாங்கி படம் வெளிவந்த சில மாதங்களில் ஒளிபரப்பியது. மிகப் பெரும் ரேட்டிங்கை அந்தப் படம் பெற்றது. 'பாகுபலி 2' படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமையையும் நல்ல விலை கொடுத்து ஏற்கெனவே வாங்கிவிட்டது. இப்படம் ஸ்டார் மா டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் என கடந்த மாதமே அறிவிப்பு வெளியானது.
வரும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி ஒளிபரப்ப உள்ளார்களா அல்லது அதற்கு அடுத்த வாரம் வினாயகர் சதுர்த்தி அன்று ஒளிபரப்ப உள்ளார்களா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவர உள்ளது. படத்தின் 100வது நாள் அன்றும் ஸ்டார் மா டிவியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பினார்கள்.
இதனிடையே, இப்படத்தின் இணையதள உரிமைக்கு மூன்று முன்னணி இணைய திரைப்பட ஒளிபரப்பு நிறுவனங்கள் போட்டியிட்டன. அவற்றில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய விலை கொடுத்து படத்தை வாங்கியுள்ளது. அந்த தளத்தில் தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய படங்களை பதிவேற்றியுள்ளார்கள். ஸ்டார் மா டிவியில் தெலுங்கு மொழிப் படம் ஒளிபரப்பான பிறகு இணையத்தில் பதிவேற்ற உள்ளார்களாம். டோலிவுட்டில் 'பாகுபலி 2' இணைய உரிமை விலைதான் தற்போதை பேச்சாம். சில கோடிகளுக்கு உரிமை விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.