‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சிதம்பரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'துப்பறிவாளன்' படத்தில் விஷாலுடன் அனு இமானுவேல், ஆண்ட்ரியா, பிரசன்னா முதலானோர் நடிக்க, அரோல் கரோலி இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தை முதலில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தார்கள். ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியவில்லை. படத்தை ரெடி பண்ணி, சென்சாருக்கு அனுப்புவதற்கே ஒரு மாதகாலம் அவகாசம் தேவைப்படும் என்பதால் துப்பறிவாளன் படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துவிட்டனர். அதாவது ஆகஸ்ட் 11 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திட்டமிட்டபடி 'துப்பறிவாளன்' படம் ஆகஸ்ட் 11 அன்று வெளியாகும்பட்சம், விஷால் நடித்து வரும் மற்றொரு படமான 'இரும்புத்திரை'யை விஷாலின் பிறந்த நாளான செப்டம்பர் 29-ஆம் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். இப்போது 'துப்பறிவாளன்' படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதால் 'இரும்புத்திரை' படத்தின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.