'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 'பாகுபலி 2' படம் வெளிவந்து இன்றுடன் 92 நாட்கள் ஆகிறது. ஏப்ரல் 28ம் தேதி வெளிவந்த இந்தப் படம் கோடை விடுமுறை காலத்தில் மக்களுக்கு மிகப் பெரும் பொழுது போக்குப் படமாக அமைந்தது.
உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்து 1700 கோடிகள் வரை வசூலித்தது வரை படம் பற்றிய தகவல்கள் உலவிக் கொண்டிருந்தன. தற்போது சத்தமேயில்லாமல் பல தியேட்டர்களில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையில் 7 தியேட்டர்களிலும், வெளியூர்களில் சில தியேட்டர்களிலும் மக்கள் படத்தைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் அதிக லாபத்தையும் கொடுத்த இந்தப் படம் 100 நாட்களைக் கடக்க இன்னும் 8 நாட்கள்தான் தேவை. 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் கூட தமிழில் 100 நாட்கள் ஓடவில்லை. 75 நாட்கள் வரை மட்டுமே வெற்றிகரமாக ஓடியது. முதல் பாகத்தின் சாதனையை விட பல சாதனைகளைப் படைத்துள்ள 'பாகுபலி 2' க்கு 100 நாள் ஓடுவதும் ஒரு சாதனைதான்.
இந்த வாரம் பெரிய படங்கள் வராததால் அந்த ஓட்டத்திற்குப் பெரிய பாதிப்பு வர வாய்ப்பில்லை. ஆனால், ஆகஸ்ட் 11ம் தேதி பல படங்கள் வருவதால் அதற்கு முன்னதாக தியேட்டரை விட்டு எடுக்க வாய்ப்புகள் அதிகம். இருந்தாலும் அடுத்த வியாழக்கிழமை வரை படத்தை தியேட்டரில் வைத்திருந்தால் 100 நாள் சாதனையை படம் புரிந்துவிடும்.