ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
யாருடா மகேஷ், மாநகரம் படங்களைத் தொடர்ந்து மாயவன், நரகாசுரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சந்தீப் கிஷன். இதேபோல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள அவர், தற்போது நக்ஷ்த்ரம், ஷமந்தக்கமனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் நக்ஷ்த்ரம் படத்தை ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ணவம்சி இயக்கியுள்ளார்.
இப்படம் பற்றி சந்தீப் கிஷன் கூறுகையில், இப்போதுதான் நான் தரமான படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன். அதனால் இந்த ஆண்டு எனது சினிமா பயணத்தில் முக்கியமான ஆண்டாக இருக்கும். இந்த படங்கள் என்னை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்லும் படங்களாக அமையும் என்று கூறும் சந்தீப் கிஷன், நட்சத்திரம் படத்தை இயக்கியுள்ள கிருஷ்ணவம்சியை நான் தெய்வம் போன்று பார்க்கிறேன் என்கிறார். காரணம், எனது மார்க்கெட் மோசமாக இருந்தபோதும் என்னை நம்பி இந்த படத்தை கொடுத்தவர் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வைத்திருக்கிறார். இந்த படம் சினிமாவில் எனக்கு நிலையான இடத்தை பிடித்துக்கொடுக்கும் என்கிறார்.