தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தற்போது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருபவர் ஜூனியர் என்டிஆர். அதோடு, தான் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் ஜெய்லவகுசா படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியினால் இந்த படம் தாமதமாகக்கூடாது என்பதற்காக ஐதராபாத்தில் நடந்து வந்த படப்பிடிப்பை, தெலுங்கு பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் புனேவுக்கு மாற்றியிருக்கிறார் ஜூனியர் என்டிஆர்.
மேலும், இந்த படத்தில் தான் நடித்துள்ள ஜெய் கதாபாத்திரத்தின் டீசரை முன்பே வெளியிட்டார் அவர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், தனது மற்ற வேடங்களான லவாகுமார், குசால்குமார் ஆகிய வேடங்களின் டீசர்களையும் இந்த மாதத்தில் வெளியிடப்போகிறாராம். இந்த ஜெய்லவகுசா படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நிறைவடைகிறதாம்.