இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் 'சகாப்தம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சகாப்தம் படம் தோல்வியை தழுவியது. இப்படத்திற்கு பிறகு 'மதுரவீரன்' என்ற படத்தில் நடிக்கிறார்.
ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாம் 'மதுரவீரன்'. எனவே பெரும்பாலான காட்சிகளை மதுரை பின்னணியிலேயே எடுத்திருக்கிறார்கள். விஜய் நடித்து வரும் மெர்சல் படமும் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அந்தப் பட்டியலில் தற்போது மதுரவீரன் படமும் சேர்ந்துள்ளது. பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்து இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் சண்முகபாண்டியனுடன் கதாநாயகியாக புதுமுகம் மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் வேலா ராமமூர்த்தி, சமுத்திரக்கனி, மைம் கோபி, பி.எல்.தேனப்பன், பாலசரவணன், 'நான் கடவுள் ராஜேந்திரன்' ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கான பாடல்களை யுகபாரதி எழுத, சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார்.