'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
அஜித்தின் சிக்ஸ்பேக்குடன் கூடிய விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும், இன்னொரு பக்கம் அஜித்தின் ரசிகர்களுக்கு அது பிடித்தது. பிறகு மிரட்டலான டீசர், 'சர்வைவா' பாடல், 'தலை விடுதலை' பாடலில் அஜித்தின் உடற்பயிற்சி கிளிப்பிங்குகள் என 'விவேகம்' படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றனர்.
இந்தவரிசையில் விவேகம் படத்தில் நடித்துள்ள நடிகை அக்ஷ்ராஹாசனும் தன் பங்குக்கு படம் பற்றி புகழ்ந்து வருகிறார். அஜித்துக்கு ஜோடி காஜல் அகர்வால் என்றாலும், அக்ஷராவுக்கு, அஜித் உடன் பணிபுரியும் பெண் வேடம் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், 'விவேகம்' படத்தின் புரமோஷனுக்காக நடிகை அக்ஷ்ரா ஹாசனை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
''இது ஒரு வழக்கமான அஜித் படமாக இருக்காது. ரசிகர்களுக்கு முற்றிலும் புதியதொரு அனுபவத்தை 'விவேகம்' படம் தரும். படத்தில் என்னுடைய கேரக்டர் அனைவருக்கும் பெரிய ஆச்சரியத்தைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது!'' என்று கூறியுள்ளார் அக்ஷ்ரா.
இதற்கிடையில் தணிக்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 'விவேகம்' படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பே தணிக்கைக்கு அப்ளை பண்ண வேண்டும் என்று புதிய விதிகள் சொல்லப்படுவதால் விவேகம் படத்தை ஆகஸ்ட் 10க்குள் தணிக்கை செய்ய முடியாத சூழல்.
அப்படியே கடைசி நேரத்தில் தணிக்கை செய்ய முடிந்தாலும் தெலுங்கு பதிப்பை குறிப்பிட்ட நாளில் சென்சார் பண்ண முடியாது என்கின்றனர். அதனால் தெலுங்கு பதிப்பை ஒருவாரம் கழித்து வெளியிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனர் விவேகம் படக்குழுவைச் சேர்ந்தவர்கள்.