டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் தான் 'வி.ஐ.பி-2'. முதலில் ஜூலை-28ஆம் தேதி இந்தப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் தற்போது ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது என மறு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாவதால் இந்தப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் தனுஷ், கஜோல், சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.
இந்தநிலையில் தெலுங்கின் முன்னணி சேனல் ஒன்றில் தனுஷிடம் நேர்காணலுக்கு ஏற்பாடு செயப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் நேர்காணல் செய்த பெண் தொகுப்பாளினி, 'வி.ஐ.பி-2' படம் குறித்த தகவல்களை கேட்பதை விடுத்து, தனுஷின் சொந்த விஷயங்கள், குறித்தே திரும்ப திரும்ப கேள்விகளை கேட்டார். குறிப்பாக, தனுஷ் பற்றி வெளியான சுஜிலீக்ஸ், தனுஷின் குடும்ப வாழ்க்கை மற்றும் சமீபத்திய தெலுங்கு சினிமாவின் போதைப்பொருள் சர்ச்சை குறித்தெல்லாம் பேட்டியின் ஆரம்பத்திலேயே கேள்விகளை கேட்க ஆரம்பித்தார் அந்த தொகுப்பாளினி.
ஆரம்பத்தில் சற்றே பொறுமை காத்த தனுஷ், ஒருக்கட்டத்தில் கோபத்துடன் மைக்கை உருவி எறிந்துவிட்டு, பேட்டியின் இடையிலேயே எழுந்து சென்றார். பின்னர் சேனல் நிர்வாகம் அவரிடம் வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து மீண்டும் அந்த பேட்டியில் தொடர்ந்து பங்கேற்றார். ஆனாலும் அந்த பேட்டி முழுதும் தனுஷ் ஒருவித இறுக்கத்துடனேயே பதில் அளித்தார் என்பது நன்றாகவே தெரிந்தது. இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.