'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தங்கமீன்கள் படத்திற்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கியுள்ள படம் தரமணி. இதில் ஆண்ட்ரியா, வசந்த் ரவி, அஞ்சலி, அழகம்பெருமாள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ளார்.
ராம் இந்த படத்தை பல மாதங்களுக்கு முன்பே முடித்துக் கொடுத்து விட்டு, தற்போது மம்முட்டி நடிக்கும் பேரன்பு படத்தை இயக்கி வருகிறார். இதுவரை தரமணி படத்தை பெட்டியில் போட்டு வைத்திருந்த தயாரிப்பாளர் தற்போது தான் அதை தணிக்கை குழுவிற்கு அனுப்பினார். படத்தின் கதை ஐ.டி கம்பெனிகளின் பின்னணியில் இன்றைய காதலை சொல்கிறது. இதனால் மது அருந்தும் காட்சிகள், பார்ட்டி தொடர்புடைய காட்சிகள் அதிகம் இருந்ததாம். குறிப்பாக ஹீரோயின் ஆண்ட்ரியா மது அருந்தும் காட்சி இருந்ததாம் அதனால் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
இதுவரை இந்தப் படத்தை திரையுலகைச் சேர்ந்த பல விஐபிகள் பார்த்துவிட்டனர். இயக்குநர் பாரதிராஜா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, நானெல்லாம் ஒரு இயக்குநரே இல்லய்யா... ராம் தான் பிரமாதமான இயக்குநர். இந்தியாவிலேயே சிறந்த இயக்குநர் அவன்தான் என்பேன்," என்று பாராட்டினார்.
ஆனால் தணிக்கைக் குழுவோ, பெண் மது அருந்தும் காட்சி உள்ளதாக கூறி ஏ சான்று தான் தர முடியும் என்று கூற, தயாரிப்பாளர் ஜேஎஸ்கே மற்றும் இயக்குநர் ராம், "எந்தக் காட்சியையும் நீக்க முடியாது, நீங்க கொடுக்கிறதைக் கொடுங்க," என உறுதியாக நின்றிருக்கிறார்கள். இப்போது ஏ சான்றிதழுடன் தான் வெளியாகிறது தரமணி.
ஆனால் ஹீரோக்கள் சரக்கடிக்கும் காட்சிகள் கொண்ட எத்தனையோ படங்கள் வந்துள்ளன. அவற்றுக்கு அல்லது அதிகபட்சம் யு/ஏ தான் வழங்குகின்றனர். இதைக் குறிப்பிட்டு நேற்று வெளியிட்ட பட விளம்பரத்தில் ஆண் ராவாக மது அருந்தினால் யு/ஏ... பெண் ராவாக அருந்தினால் ஏ! ஆக தரமணி ஏ! என்று குறிப்பிட்டுள்ளனர். இன்று வெளியிடப்பட்ட விளம்பரத்தில் "ஆண் பிடித்தாலும் சரி, பெண் பிடித்தாலும் சரி புகையால் வருவது புற்று நோயே" என்று குறிப்பிட்டுள்ளனர். படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது.