இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் 4 கோடிக்கும் அதிகமானோர் பார்ப்பதாக டிஆர்பி கணக்கு சொல்கிறது. அதன்காரணமாக ஏற்கனவே ஜிஎஸ்டி வரிக்கு பிறகு தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் கூட்டம் குறைந்து விட்ட நிலையில், இப்போது பிக்பாஸினால் இன்னும் தியேட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், நேயர்கள் மட்டுமின்றி சினிமாத்துறையினரின் கவனமும் கூட பிக்பாஸ் நிகழ்ச்சி பக்கம் திரும்பியிருக்கிறது. அவர்களும் அந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்த்து வருவதோடு அதுபற்றிய கமெண்ட்டுகளையும் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நேயர்களைப் போலவே சினிமா நடிகர் நடிகைகளும் ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஏற்கனவே காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியாவுக்கு டுவிட்டரில் ஆதரவு தெரிவித்ததை அடுத்து இப்போது சிம்புவும் அவருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதோடு, ஒருவர் மற்றவர்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாக இருந்தால் அவரை குறை சொல்லி ஓரங்கட்டாதீர்கள், தனியாக விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார் சிம்பு.