பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
இன்றைய தேதியில் கைவசம் அதிக படங்களை வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருபவர் விஜய்சேதுபதி தான். ஏறக்குறைய ஒரு டஜன் படங்களில் நடிக்க ஒப்புக் காண்டிருக்கும் அவருடைய படப் பட்டியலில் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படமும் ஒன்று.
இந்தப் படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் இன்னொரு கதாநாயகனாக நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடிக்கிறார்.
ஏற்கெனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், ரம்மி, புரியாத புதிர் ஆகிய படங்களில் நடித்துள்ளார் காயத்ரி. அடுத்தடுத்து விஜய்சேதுபதியுடன் இணைந்ததால் கிசுகிசுவுக்கும் வழிவகுத்தது. எனவே காயத்ரியை சற்றே ஒதுக்கி வைத்திருந்தார் விஜய்சேதுபதி.
தற்போது அவர் படமில்லாமல் கஷ்டப்படுவதால் தனக்கு ஜோடியாக நடிக்க காயத்ரிக்கு வாய்ப்பு கொடுத்தார். விஜய்சேதுபதி - காயத்ரி நான்காவதுமுறையாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள்.