நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
பிச்சைக்காரன் ஹிட்டுக்குப்பிறகு எமன் படத்தில் நடித்தார் விஜய் ஆண்டனி. அதையடுத்து அண்ணாதுரை என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திலும் ஒரு மாறுபட்ட கதையில் நடிக்கும் விஜய் ஆண்டனி, அதையடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கும், காளி படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் சுனைனாவும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறாராம்.
அதுபற்றி சுனைனா கூறுகையில், சமுத்திரகனியுடன் நடித்த தொண்டன் படத்தை பெரிதாக எதிர்பார்த்தேன். ஆனால் படம் வெற்றி பெறவில்லை. இருப்பினும் இப்போது விஜய் ஆண்டனியுடன் நடிக்கும் காளி படத்தில் நல்ல வேடத்தில் நடிக்கிறேன். இதற்கு முன்பு சீனுராமசாமி இயக்கத்தில் நான் நடித்த நீர்ப்பறவையில் நடித்தது மாதிரியான வேடம், இந்த காளி படத்தில் கிடைத்திருக்கிறது. அதனால் இந்த படம் மீண்டும் எனது மார்க்கெட் உயர்த்தும் என்று கூறும் சுனைனா, மலையாளம், கன்னடத்திலும் சில படங்களில் நடிப்பதாக சொல்கிறார்.