டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தான் நடிக்கும் படங்களில், ரசிகர்களுக்கு எந்த வகையிலும் ஏமாற்றம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில், கவனமாக இருக்கிறார், சிவகார்த்திகேயன். நயன்தாராவுடன், அவர், முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள வேலைக்காரன் படத்தில், ரசிகர்களை அனைத்து வகையிலும் திருப்திப்படுத்தும் வகையில், அழுத்தமான கதை அமைந்துள்ளதாம்.
உணவில் கலப்படம் செய்யப்படுவதை தடுத்து, போராட்டம் நடத்தும் ஆவேச இளைஞனாக, சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடித்துள்ளாராம். ராஜாவின், தனி ஒருவன் படத்தில், நயன்தாராவின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதை சரி செய்யும் வகையில், இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு சமமாக, நயனுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் இயக்குனர் ராஜா.