பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இரு நாட்டுக்கும் நல்ல பிணைப்பு ஏற்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இஸ்ரேல் திரைப்பட விழா நடக்கிறது. இண்டோ சினி அப்ரிஷேசன் அமைப்புடன் இணைந்து இஸ்ரேலிய தூதரகம் இதனை நடத்துகிறது.
இதில் பல்வேறு விருதுகளை குவித்த இஸ்ரேலிய திரைப்படமான அபுலா எக்ஸ்பிரஸ், டாக்டர் பொர்மெண்டஸ், ஹில் ஸ்டார்ட், மெல்டிங் அவே, ஒயிட் பேந்தர் உள்பட பல படங்கள் திரையிடப்படுகிறது.
24-ந் தேதி மேக்ஸ் முல்லர் பவனில் நடக்கும் துவக்க விழாவில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் யேல் ஹஸ்வித் கலந்து கொண்டு துவக்கி வைக்கிறார். 24ந் தேதி தொடங்கி 26ந் தேதி வரை 3 நாட்கள் இந்த படவிழா நடக்கிறது. நுங்கம்பாக்கம் மேக்ஸ் முல்லர் பவன் அரங்கில் படங்கள் திரையிடப்படுகிறது.