Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீண்டும் முதல் ஹீரோவை வைத்து தனுஷ் தயாரிக்கும் 'மரடோனா'..!

16 ஜூலை, 2017 - 15:39 IST
எழுத்தின் அளவு:
Dhanush-produces-film-maradona

சமீபகாலமாக ஒரு தயாரிப்பாளராக மலையாள திரையுலகம் பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார் தனுஷ். அந்தவகையில் மலையாள சினிமாவில் 'தரங்கம்' என்கிற படத்தை தயாரிப்பதன் மூலம் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். இந்தப்படத்தை மினி ஸ்டுடியோ என்கிற மலையாள நிறுவனம் தனுஷுடன் இணைந்து தயாரித்து வருகிறது. படத்தின் கதாநாயகனாக மலையாள சினிமாவின் வளர்ந்துவரும் ஹீரோவான டொவினோ தாமஸ் நடிக்கிறார். இவர் தவிர இன்னொரு நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மலையாள இளம் நடிகரான உன்னி முகுந்தன்.. டோமினிக் அருண் என்பவர் இயக்கும் இந்தப்படத்திற்கு கோபிசுந்தர் இசையமைக்கிறார்.

இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், மலையாளத்தில் தனது இரண்டாவது படத்தை துவங்கியுள்ளது தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ்.. படத்திற்கு பிரபல கால்பந்து வீரரான 'மரடோனா'வின் பெயர் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்திலும் டொவினோ தாமஸ் தான் ஹீரோ.. ஷர்மிளா நாயர் என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். விஷ்ணு நாராயணன் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் திலீஷ் போத்தன், ஆஷிக் அபு, சமீர் தாஹிர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தகது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in