ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆர்.கண்ணன் தயாரிப்பு, இயக்கத்தில், கவுதம் கார்த்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ஜூன் 29-ம் தேதி வெளியான படம் இவன் தந்திரன். இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் நடத்திய ஸ்டிரைக் காரணமாக இப்படத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. போராட்டம் முடிவுக்கு வந்தவுடன் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.
ஆனாலும் இவன் தந்திரன் படத்தை தயாரித்த கண்ணனுக்கு இழப்பு என்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக் ரைட்ஸ் பெரிய விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல அந்தப்படத்தை இயக்குநர் கண்ணனே இயக்கவுள்ளார். இவன் தந்திரன் தெலுங்கு ரீமேக்கிற்கான நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.