வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ரஜினி நடித்த கபாலி படத்தை அடுத்து தற்போது தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி-2, ஸ்கெட்ச் ஆகிய படங்களை தயாரித்து வருகிறார் எஸ்.தாணு. இதில் செளந்தர்யா ரஜினி இயக்கியுள்ள விஐபி-2 படத்தின் ஆடியோ விழாவை மும்பையில் பிரமாண்டமாக நடத்தினார் தாணு. இந்த படத்தில் ஹிந்தி நடிகை காஜோலும் நடித்திருப்பதால் படத்தை ஹிந்தியிலும் அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறார்.
அதையடுத்து விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் படத்தின் படப்பிடிப்பும் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ விழாவை லண்டனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்போதுமே தனது படங்களின் புரொமஷன்களில் கூடுதல் கவனம் செலுத்தும் எஸ்.தாணு, விக்ரமை வைத்து தான் தயாரித்த கந்தசாமி படத்திற்கு மிகப்பெரிய அளவில் பப்ளிசிட்டி செய்தவர், ரஜினியின் கபாலி படத்திற்கும் பிரமாண்டமாக விளம்பரம் செய்தார். அதேபோல் விக்ரமின் ஸ்கெட்ச் படத்திற்கும் பிரமாண்ட பப்ளிசிட்டிக்கு தயாராகிக்கொண்டிருக்கிறாராம்.