பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஜினியா, அஜித்தா, விஜய்யா, இவர்களில் யார் இணைய உலகில் முந்திக் கொண்டிருப்பது என கடந்த சில படங்களாகவே போட்டி இருந்து வருகிறது. ஒருவர் சாதனையை மற்றவர் மிஞ்சம் அளவிற்கு அடுத்தடுத்து போட்டி போட்டுக் கொண்டு போய்க் கொண்டேயிருக்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகில் இதுவரை எந்த ஒரு டீசரும் புரியாத சாதனையை 'கபாலி' படம் புரிந்தது. அந்த டீசர் இதுவரை 3 கோடியே 40 லட்சம் பார்வைகளையும், 4 லட்சத்து 64 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது. அதிகப் பார்வைகள் எண்ணிக்கையில் அதற்குப் பிறகு வந்த வேறு எந்த டீசரும் 'கபாலி' டீசரை மிஞ்ச முடியாமல் இருக்கிறது. அதே சமயம் 'விவேகம்' டீசர் லைக்குகள் எண்ணிக்கையில் 'கபாலி' டீசரை மிஞ்சிவிட்டது.
'விவேகம்' டீசர் 4 லட்சத்து 72 ஆயிரம் லைக்குகள் பெற்று புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. 1 கோடியே 73 லட்சம் பார்வைகளிலேயே இவ்வளவு லைக்குகளைப் பெற்றுள்ளதும் குறிப்பிட வேண்டிய விஷயம்.
'கபாலி' டீசரின் பார்வையை 'விவேகம்' டீசர் மிஞ்சுமா என்பதுதான் அடுத்த கேள்வி. ஆனால், அதற்கு இன்னும் 1 கோடியே 70 லட்சம் பார்வைகள் தேவைப்படுகிறது. அதனால், அந்த சாதனையை 'விவேகம்' டீசர் முறியடிக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.