கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
தமிழ்த் திரையுலகில் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் விஜய், அஜித் ஆகியோருக்குப் பிறகு சத்தமில்லாமல் வளர்ந்து கொண்டிருக்கிறார் தனுஷ். அவருக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட சிம்பு நடித்த படங்கள் தொடர் தோல்வியைச் சந்தித்து வருவதாலும், தனுஷுக்கு வேறு போட்டியாளர் என யாரும் இல்லாததாலும் தனக்கெனப் தனி பாதையை அழுத்தமாக பதிய வைத்து வருகிறார் தனுஷ். அதற்கு உதாரணமாக 'வேலையில்லா பட்டதாரி 2' டிரைலரைச் சொல்லலாம்.
பொதுவாக, யு டியூபில் வெளியிடப்படும் டீசர், டிரைலர்களில் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரது படங்கள்தான் சாதனை செய்வது வழக்கம். 1 கோடி பார்வைகளை அவர்களது படங்கள்தான் கடக்கும். ஆனால், அந்த சாதனையைத் தற்போது தனுஷும் எட்டிப் பிடித்துள்ளார்.
'வேலையில்லா பட்டதாரி 2' டிரைலர் யு டியூபில் மட்டும் சுமார் 90 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. ஃபேஸ்புக்கில் 55 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படத்தின் தெலுங்கு டிரைலர் 56 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
இவை அனைத்தும் தனுஷின் முந்தைய பட சாதனைகளை முறியடித்துள்ளது. தனுஷ் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'கொடி' டிரைலர் 65 லட்சம் பார்வைகளையும், 'தொடரி' டிரைலர் 38 லட்சம், 'தங்கமகன்' 38 லட்சம், 'வேலையில்லா பட்டதாரி' 38 லட்சம், 'மாரி' 61 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளன. இப்போது 'வேலையில்லா பட்டதாரி' 90 லட்சம் பார்வைகளைக் கடந்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.
டிவிட்டரிலும் 40 லட்சம் தொடர்பாளர்களைக் கடந்துள்ள தனுஷ், இணைய உலக ஆதரவில் தற்போது தமிழ்த் திரையுலகில் முன்னணியில் இருக்கிறார்.