நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் பெரிய இடைவெளிவிடுவதால் ரசிகர்களின் கவன எல்லையிலிருந்து மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறார் விக்ரம். விக்ரம் நடித்த 'இருமுகன்' படம் வெளிவந்து கிட்டத்தட்ட ஓராண்டை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் அவரது அடுத்தப்படம் வெளியாகவில்லை.
விக்ரம் நடித்து வரும் ஸ்கெட்ச், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களின் படப்பிடிப்பு இன்னும் முடிந்தபாடில்லை. 'ஸ்கெட்ச்' படத்தைப் பொறுத்தவரையில், 'டாக்கி போர்ஷன்' முடிவடைந்துவிட்ட நிலையில், இன்னும் இரண்டு பாடல்கள் எடுக்க வேண்டி உள்ளதாம்.
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் தற்போதைய ஷெட்யூல் மட்டும் முடிந்துவிட்டதாக கௌதம் மேனன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
''55 டிகிரி தகிக்கும் வெயிலில் நடைபெற்று வந்த இந்த ஷெட்யூலுக்கான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. நன்றி சியான்! ஒட்டுமொத்த 'துருவ நட்சத்திரம்' படக்குழுவினரின் வேலைகள் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்திருக்கிறது!'' என ட்வீட் செய்துள்ளார் கௌதம் மேனன்.
கிட்டத்தட்ட 80% மட்டுமே படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதால், இன்னும் 20% படப்பிடிப்பு மீதமுள்ளது. இதை படமாக்கி முடிக்க மேலும் சில மாதங்கள் ஆகும் என்று கௌதம் மேனன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.