இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழில் வெளிவந்த சென்னையில் ஒரு நாள் படத்தின் ஒரிஜினலான மலையாள வெர்ஷன் டிராபிக் படத்தில் அறிமுகமானவர் நமீதா பிரமோத். அதற்கு முன் சின்னத்திரை சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். டிராபிக் படத்திற்கு பிறகு புதிய தீரங்கள், சவுண்ட் தோமா, விக்ரமாதித்யன், வில்லை வீரன், சந்திராட்டன் எவிடே என ஏராளமான மலையாளப்ப படங்களில் நடித்தார். நடிப்புக்காக பல படங்களில் விருதுகளையும் வாங்கிக் குவித்தார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே என் காதல் புதிது என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். மாரீஸ் குமார் இயக்கத்தில் ராம் சத்யா என்ற புதுமுகத்துடன் நடித்தார். ஆனால் அந்தப் படம் வந்த சுவடு தெரியாமல் போனது அதனால் மீண்டும் மலையாளப் படத்துக்கு திரும்பி விட்டார்.
தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மலையாளத்தில் திலீஸ் போத்தன் இயக்கிய மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் ரீமேக் இந்தப் படம். இன்னும் பெயர் சூட்டவில்லை. தேசிய விருது மற்றும் மாநில விருதுகளை குவித்த படம் இது. தமிழில் பிரியதர்ஷன் இயக்குகிறார். பகத் பாசில் நடித்த கேரக்டரில் உதயநிதி நடிக்கிறார், அபர்ணா பாலமுரளி நடித்த கேரக்டரில் நமீதா பிரமோத் நடிக்கிறார். அனுஸ்ரீ நடித்த கேரக்டரில் பார்வதி நாயர் நடிக்கிறார்,
சமுத்திரகனி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். தர்புகா சிவா இசை அமைக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. வருகிற 19ந் தேதி குற்றாலத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்தின் மூலம் நமீதா பிரமோத் விட்ட இடத்தை பிடிப்பாரா என்பது படம் வெளிவந்ததும் தெரியும்.