தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் இணைந்து நடித்துள்ள 'விக்ரம் வேதா' இந்த மாதம் 7-ஆம் தேதி ரிலீசாக இருந்தது. தியேட்டர் ஸ்டிரைக் காரணமாக பல படங்களின் ரிலீஸ் தேதி குழப்பத்துக்குள்ளானது. அதில் 'விக்ரம் வேதா' படமும் அடக்கம்.
இந்நிலையில் 'விக்ரம் வேதா' படத்தை வருகிற 21-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கிடையில் விக்ரம் வேதாவுக்கு தணிக்கையில் யுஏ கொடுத்ததால் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரிவைசிங் கமிட் படம் பார்த்து சான்றிதழ் கையில் கிடைக்க சில நாட்களாகும் என்பதை கணித்து 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
சுந்தர் சி தயாரிப்பில் 'ஹிப் பாப் தமிழா' ஆதி கதாநாயகனாக நடித்திருக்கும் 'மீசையை முறுக்கு' படமும் இம்மாதம் 21-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.