ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள இளம் முன்னணி இயக்குனர் வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன்.சில படங்களில் ஹீரோவாக நடித்தவர், தற்போது நடிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, அண்ணன் வழியை பின்பற்றி டைரக்சனுக்குள் நுழைந்துள்ளார். தனது அண்ணன் முதல் படத்தில் அறிமுகப்படுத்திய நிவின்பாலி தான் இவரது முதல் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.. இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.. ஆனால் கதாநாயகியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் பாருங்கள்.. அதுதான் மலையாள திரையுலகை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது..
இது வெறும் யூக செய்தியல்ல.. நேற்று இந்தப்படத்தின் துவக்க விழாவை நடத்தி படத்திற்கு 'லவ் ஆக்சன் ட்ராமா' என டைட்டிலும் வைத்துவிட்டார்கள்.. படத்தில் நிவின்பாலி- தினேஷ் என்கிற கேரக்டரிலும், நயன்தாரா- ஷோபா என்கிற கேரக்டரிலும் நடிக்கிறார். வினீத்-நிவின்-தயன் சீனிவாசன் கூட்டணியில் எப்போதுமே முக்கியமான ஆளாக கருதப்படும் அஜூ வர்கீஸ் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் அறிமுக டீசரில் கூட இவர் பெயர்தான் முதலில் இடம் பெற்றுள்ளது. தனது தம்பியின் முதல் படமே மாஸ் ஹிட்டாக அமைய வேண்டும் என்பதற்காக இந்தப்படத்திற்கு தானே கதை எழுதியுள்ளார் வினீத் சீனிவாசன்... 2018 சம்மர் ரிலீஸாக இது வெளியாகவுள்ளது.